187
கேரளா அருகே ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விடுமுறையை கழிப்பதற்காக கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திற்கு சென்றவர்கள் மீன்பிடி படகில் நாரணிபுழா ஆற்றுக்கு சென்றுள்ள போது படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஆற்றில் படகு மூழ்கியதில் 4 பெண் குழந்தைகள் உட்பட் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஒரு சிறுமியும் முதியவர் ஒருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் ஒரு பக்கமாக படகில் நின்றதே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love