குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்..
ஐ.நா. தடையை மீறி புதிய செயற்கைகோள் ஒன்றினை பறக்க விட வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலை உருவாகி உள்ளது. வடகொரியா தனது அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 29ம் திகதி ஹூவாசாங்-15 என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியிருந்தது.
இவ்வாறு வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்காக அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அறிவித்திருந்த ஐ.நா. ஹூவாசாங்-15 சோதனையில் கடும் அதிருப்தி அடைந்து மேலும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. அத்துடன் மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, செயற்கைகோள்களை செலுத்துவது உள்ளிட்ட விண்வெளி தொடர்பான எந்த சோதனையிலும் ஈடுபடக்கூடாது எனவும் தடை விதித்தது.
இந்த நிலையில், வடகொரியா ஒரு புதிய செயற்கைகோளை தயாரித்து இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அதற்கு குவாங்மியோங்சாங்-5 என பெயர் சூட்டியும் உள்ளதாகவும் தென்கொரியாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தங்களுக்கு கிடைத்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில், அவர்களின் திட்டம், அதிநவீன கமராக்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் கொண்ட ஒரு செயற்கைகோளை விண்ணில் நிலை நிறுத்தவேண்டும் என்பதாகும் எனவும் குறித்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் உளவு பார்க்கும் பணிக்காக ஏவப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இந்த தகவலை வடகொரியாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றும் உறுதி செய்துள்ளது.விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதற்காக செயற்கைகோளை ஏவுவதற்கான அனைத்து சட்டப்பூர்வ உரிமைகளும் வடகொரியாவுக்கு உண்டு எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த செற்கைக்கோள் இன்னும் ஓரிரு வாரங்களில் ஏவப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் கொரிய தீபகற்ப பகுதியில் சற்று தணிந்திருந்த போர் பதற்றம் மீண்டும் அதிகரித்து உள்ளது.
வடகொரிய ஏவுகணை தயாரிப்பாளர்களை அமெரிக்கா இலக்கு வைத்தது ….
ரி பியோங்-கொல்(இடது). கிம் ஜோங்-சிக்(வடது)
இரண்டு வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையினை கொண்டுவந்துள்ளது. வட கொரியாவின் அணு ஏவுகணைத் திட்டத்தில் இந்த இரண்டு அதிகாரிகளும் முக்கிய பங்காற்றுவதாக அமெரிக்கா கூறுகிறது. அந்த இரண்டு அதிகாரிகள் கிம் ஜோங்-சிக், ரி பியோங்-கொல் என அமெரிக்காவின் கருவூலத்துறை கூறியுள்ளது. வட கொரியாவின் பொலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில், இவர்கள் இருவரும் ”முக்கியத் தலைவர்கள்” எனவும் கூறியுள்ளது.
வட கொரியாவின் அண்மைய பொலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று வட கொரியா மீது புதிய பொருளாதாரத்தடைகளை ஐ.நா பாதுகாப்பு பேரவை விதித்தது.
ஐ.நாவின் இந்த நடவடிக்கை போருக்கான செயல் என்றும்,முழு பொருளாதார முற்றுகைக்குச் சமமானது என்றும் வட கொரியா கூறியது. அமெரிக்காவின் புதிய தடைகளால், இந்த இரு அதிகாரிகளும் அமெரிக்காவில் எந்த பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. அமெரிக்காவில் அவர்கள் ஏதேனும் சொத்து வைத்திருந்தால் முடக்கப்படும்.
கிம் ஜோங் உன்னுடன் சிரித்துக்கொண்டிருக்கும் ரி பியோங்-கொல்
வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளின் போது, கிம் ஜோங் உன்னுடன் இவர்கள் இருவரும் புகைப்படங்களில் தோன்றுவார்கள். கடந்த சில மாதங்களில், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்தது. இந்த ஏவுகணை முழு அமெரிக்காவையும் அடையக்கூடியது என வட கொரியா கூறியிருந்தது.
இந்த இரண்டு அதிகாரிகளும், ஆயுத தயாரிப்பாளர் ஜங் சான்-ஹெக்கிம், கிம் ஜோங் உன்னால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் என கடந்த மே மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வில் கூறியிருந்தது. ரி பியோங்-கொல் ரஷ்யாவில் படித்த முன்னாள் விமானப்படை தளபதி என்றும்,கிம் ஜோங்-சிக் ஒரு மூத்த ராக்கெட் விஞ்ஞானி என்றும் ரொய்ட்டர்ஸ் கூறியிருந்தது.
கொல்படத்தின் காப்புரிமைKCNA/REUTERS
Image caption