150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தெனியாய பிரதேசத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தெனியாய பல்லேகம கங்கொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இசை நிகழ்வு ஒன்றின் போது கத்தியால் குத்தி இராணுவச் சிப்பாய் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
Spread the love