ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இரு வாகனங்களைத் தவிர வேறு எந்த அரச வாகனங்களையும் தேர்தல் காலங்களில் பயன்படுத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அலுவலக பணியாளர்கள் அல்லது வேறு எந்த நபரோ அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனப் பிரதானிகளின் பொறுப்பு எனவும் தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழு கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட இலக்கங்களுடன் அரச வாகனங்களைப் பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்களும் குறித்த கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்காக விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என்பவற்றைப் பயன்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.