177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் ஹாட்லீக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் ஹாட்லீக் கல்லூரியின் மாணவன் ஸ்ரீதரன் துவாரகன் என்ற மாணவன் இவ்வாறு அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
2017ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பௌதீக விஞ்ஞான பிரிவில் குறித்த மாணவன் அகில இலங்கை ரீதியில் வெற்றியீட்டியுள்ளார். இந்த மாணவனின் தந்தை யாழ்ப்பாணம் வடமராட்சி வலய கணனி வள முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love