குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா பயிற்சி அளித்துள்ளதாக ரஸ்ய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ரஸ்யாவின் முக்கிய இராணுவ அதிகாரிகளில் ஒருவரான வலரி ஜெராசிமோவ் ( Valery Gerasimov ) இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமெரிக்கா ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அமெரிக்காவின் முகாம் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க முகாம்களில் ஐ.எஸ் தீவிரவாத முக்கியஸ்தர்கள் இருப்பது குறித்த புகைப்பட மற்றும் செய்மதிப்பட ஆதாரங்கள் காணப்படுவதாகவும் குறித்த ரஸ்யாவின் முக்கிய இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.