குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் அப்பிள் நிறுவனத்திற்கு எதிராக எட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் தொடர்பிலேயே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எவ்வித முன் எச்சரிக்கையும் இன்றி ஐ போன்கள் இயங்கு வேகம் குறைவடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ போன் பயனர்கள் பிழையாக நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதே விதமான வழக்கு ஒன்று இஸ்ரேல் நீதிமன்றிலும் தொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பழைய அல்லது குறைபாடுகள் உடைய பற்றறிகளினால் ஏற்படக்கூடிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையிலான மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. எனினும், பற்றறி குறைபாடு காணப்படும் செல்லிடப்பேசிகளுக்கு மாற்று பற்றறிகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.