குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரோஹினிய பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து மியன்மாரின் ஆன்சான் சூ கீ மௌனம் காத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்திய போது ஆன் சான் சூ கீ, ரோஹினிய பெண்கள் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி பிரமிலா பட்டன் ( Pramila Patten ) அண்மையில் மியன்மாருக்கு பயணம் செய்திருந்தார். இதன் போது ஆன் சான் சூ கீயையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்த சந்திப்பின் போது ஆன் சான் சூ கீ, அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.