199
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் உதவிகளை வழங்க உள்ளது. வட மாகாணத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் 6 லட்சத்து நான்காயிரத்து 731 அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளது. மீள்குடியேற்றத்திற்கு உதவுதல் மற்றும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுதல் உள்ளிட்ட காரணிகளை முதனிலைப்படுத்தி இவ்வாறு உதவு தொகை வழங்கப்பட உள்ளது.
2003ம் ஆண்டு முதல் இதுவரையில் ஜப்பானிய அரசாங்கம் நிலக்கண்ணி வெடி அகற்றுவதற்காக 32 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love