குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறை அதிகாரங்களை வரையறுக்கும் வகையில் இஸ்ரேலிய பாராளுமன்றில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவல்துறையினரின் அதிகாரங்களை வரையறுக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய சட்டத் திருத்தமொன்றை இஸ்ரேல் அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில் இந்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பாவி மக்களை பாதுகாக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சட்டமானது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் நோக்கிலானது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரதமர் நெட்டன்யாகூ உள்ளிட்டவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அவர்களின் தவறுகளை மூடி மறைக்கும் நோக்கில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என எதிர்க்கட்சியொன்று தெரிவித்துள்ளது.