கடந்த வியாழக்கிழமை இரவு 12 உயிரிழந்த நியூயோர்க் தீ விபத்து சம்பவத்துக்கு அடுப்பில் ஒரு சிறுவன் விளையாடியதுதான் எனத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்திருந்தனர். யாருமில்லாத நேரத்தில் தெரியாமல் அச்சிறுவன் அடுப்பு பற்றவைத்ததை தொடர்ந்து, கட்டடத்தில் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை இதுவரை வெளியிடப்படவில்லை. தீயை கட்டுக்குள் கொண்டுவர, 170க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடுமையான உறைபனியில் போராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயிலிருந்து தப்பிப்பதற்காக குளியல் தொட்டியில் ஒதுங்கிய பெண் ஒருவர் இரு குழந்தைகளை அணைத்த நிலையில் இறந்து காணப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடுமையான குளிர்காலம் என்பதனால் மைனஸ் 10 டிகிரிக்கு குறைந்துள்ள தட்ப வெட்ப நிலையால், தீயை அணைக்க பயன்படுத்தப்பட்ட நீர், பனிக்கட்டிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டால் அது மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்க அவ்விடத்தின் கதவுகளை மூடிவைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் நியூயோர்க் நகர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் பலி…
Dec 29, 2017 @ 05:02
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா பகுதியான பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் நேற்று மாலை இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
முதலாம் தளத்தில் இருந்து ஏனைய தளங்களுக்கும் விரைவாக தீ பரவியதாகவும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 1 வயது குழந்தை உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்ததாகவும் 4 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் இஸ்ரீஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்ததீ விபத்து காரணமாக பலர் வீடுகளை இழந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள், கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செஞ்சிலுவை சங்கத்தினர் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடநத் கால் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற மிகவும் மோசமான தீ விபத்து இது என நியூயோர்க் மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார்.
கடந்த 18-ம் திகதி நியூயோர்க்கின் ப்ரூக்லின் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்ததுடன் மார்ச் மாதம் பிராங்க்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.