174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
தமக்கு ஏன் ஓய்வு வழங்கப்பட்டது என்பது புரியவில்லை என பிரபல வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். பங்களாதேசிற்கான குழாமில் தம்மை உள்ளடக்கவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். மேலும் 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
தமது வயதுக்கு தம்மை ஓய்வுறுத்தி வேறு வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்;த செப்டம்பர் மாதத்தின் பின்னர் மாலிங்க சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love