155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
மாகாணசபைகளுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. எதிர்காலத்தில் நடத்தப்பட மாகாணசபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் அளவில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாகாணசபைகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்யும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழு ஒன்றை நிறுவியிருந்தார். இந்த ஆணைக்குழுவின் பணிகள் கடந்த ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love