யாழில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை தாம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் குறித்த இளைஞர்கள் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய போதே அவர்களைக் கைது செய்ததாக யாழ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் எனவும் இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த காவல்துறையினர் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.