தாய்லாந்தில் நிதி நிறுவனங்களை ஆரம்பித்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 13 ஆயிரத்து 275 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 வயதான புதிட் கிட்டிகிராடிலோக் Phudit Kittitradilok என்பவர் நிதி நிறுவனங்கள் நடத்தி அதில் பணம் செலுத்துபவர்களுக்கு அதிக அளவில் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்தார்.
அதனை நம்பி அதிகமானோர் அதில் பணம் செலுத்தியுள்ள நிலையில் அவர் பணத்தினை மீளச் செலுத்தாது 40 ஆயிரம் பேரிடம் பல கோடி பணத்தினை மோசடி செய்துள்ளார். இது தொடர்பில் இவர்மீது இரண்டாயிரத்து 653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அவருக்கு 13 ஆயிரத்து 275 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.