ஹபராதுவை கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபராதுவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஹபராதுவை, ஹெடீவத்தை பிரதேச கடலில் நீராடிக் கொண்டிருந்த 38 வயதுடைய போலாந்து நாட்டு பிரஜை ஒருவரும் நீரில் மூழ்கியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது