அமெரிக்காவுடனான நல்லுறவை தொடர விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கடிதம் அனுப்பியுள்ளார்.
ரஸ்யா 2014-ம் ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியை தனியாக பிரித்து கடந்த கிரிமியா என்ற தனிநாட்டை உருவாக்கியதனால், அமெரிக்கா – ரஸ்யா நாடுகளுக்கிடையில் முரண்பாட்டுநிலைமை தோன்றியுள்ளது. அத்துடன் சிரியா, ஈரான் நாடுகளுடனான நிலைப்பாடு தொடர்பிலும் இரு நாடுகளும் எததிரான நிலைப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த வருடம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு காணப்பட்டதாக தெரிவித்து அமெரிக்கா விசாடிரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்காவுடனான நல்லுறவை தொடர விரும்புவதாக டொனால்ட் டிரம்ப்புக்கு விளாடிமிர் புதின் கடிதம் அனுப்பியுள்ளார். டிரம்ப்புக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து புதின் அனுப்பியுள்ள கடிதத்தில், சம மரியாதை மற்றும் பரஸ்பர நன்மதிப்புடன் கூடிய நீண்டகால நடைமுறை சாத்தியமான நல்லுறவை அமெரிக்காவுடன் தொடர ரஸ்யா விரும்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலகை அச்சுறுத்தும் சவால்களை எதிர்கொள்ளவும், நிரந்தரத்தன்மை உருவாகவும் அமெரிக்கா – ரஸ்யாவுக்கு இடையிலான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் முக்கியமானதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.