132
தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்காக ஆசிரியர் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் வடக்கு மாகாண பல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார். வவுனியாவில் இன்று நடைபெற்ற ஆசிரியர் முன்சேவைப் பயிற்சி நிறைவு நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த சில வருடங்காக வடக்கு மாகாணம் கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய பெறுபேறுகள் வடக்கு மாகாணத்தை மீண்டும் முன்நோக்கி நகர்த்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர், உயர் தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் அகில இலங்கையில் முதல் ஐம்பது இடத்திலும் வடக்கை சேர்ந்த மாணவர்கள் பத்துப் பேர் இடம்பெற்றதாகவும் தற்போது மீண்டும் அந்த இடத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எமது மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அவர்களுக்காக கற்பித்து, வடக்கு மாகாணத்தையும் தமிழ் இனத்தையும் உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் கூறினார்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்களினால் உருவாக்கப்பட்ட பூந்தோட்டம் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. அத்துடன் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பட்டதாரி ஆசிரியர்களுக்கான முன்சேவைப் பயிற்ச்சி கடந்த டிசம்பர் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 21 நாட்கள் இடம்பெற்றன.
வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் முத்து ராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி-பி.செல்வி இறேனியஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Spread the love