“பத்மாவதி கதாபாத்திரம் அழகு அல்ல, பத்மாவதி ஆத்மாவுடன் தொடர்புடையவள். நான் பத்மாவதியாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன். அதில் இருந்து விடுபட்டு புற வெளிக்கு வர வேண்டும். நான் நானாக மாறவேண்டும். அதன் பின்பே என்னால் அடுத்த படத்தில் நடிக்க முடியும்.
பத்மாவதியாகவே வாழ்ந்து கொண்டிருந்த நான், மன அழுத்தத்தால் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். என் அம்மாவிடம் கூட தெரிவிக்காமல் தனியாக தவித்தேன். பின்னர் வைத்தியரை அணுகி உரிய சிகிச்சை எடுத்து குணமடைந்தேன்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலும், பத்மாவதி மீண்டும் என்னுள் ஐக்கியமாகிவிடுவாளா? ஆத்மா சார்ந்த அந்தக் கதாபாத்திரத்தின் தாக்கம் மீண்டும் வந்து மன அழுத்தம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. அந்த மன அழுத்தம் பற்றி பேச நான் வெட்கப்படவில்லை.
சினிமா பின்னணி இல்லாமல் இந்த துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. இந்த துறை பாதுகாப்பானதாகவே நான் உணர்கிறேன்” என மனம் திறந்துள்ளார் தீபிகா படுகோனே..
தீபிகா படுகோனே நடித்துள்ள வரலாற்று படமான பத்மாவதி பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது. படத்தின் பெயரை மாற்றுமாறும், 26 இடங்களில் காட்சிகளை வெட்டுமாறும், தணிக்கை குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.