178
கண்டி, திகன பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரம் சம்பந்தமான அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த மே மாதம் 09ம் திகதி முதல் 12ம் திகதி வரை விசாரணைகளை நடத்தியிருந்தது.
இந்த விசாரணைகள் ஆணைக்குழுவின் தலைவி மற்றும் ஆணையாளர்களால் நடத்தப்பட்டதுடன், பொதுமக்களிடம் சாட்சி விசாரணைகளும் நடத்தப்பட்டிருந்தது. அந்த அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் அதனை வெளியிடுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Spread the love