இலங்கையில் நடைபெறவுள்ள 9ஆவது சர்வதேச சமுத்திர மாநாட்டில் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உட்பட 39 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.சர்வதேச சமுத்திர மாநாடு 9ஆவது தடவையாகவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. நாளை மறுதினம் திங்கட்கிழமை (22. 10.18) ஆரம்பமாகும் இந்த சர்வதேச மாநாடு தொடர்ந்தும் இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது.
”கடல்வள முகாமைத்துவத்தை வினைத்திறன் உடையதாக்குவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை ஒன்றிணைத்தல்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் 35 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கடல்வள ஆய்வாளர்கள், கப்பல்கட்டும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.