ஆப்கானிஸ்தான் இன்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் வாக்களிக்கும் நிலையில் அதற்காக சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள தலிபான்கள் அந்நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களில் அவர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் பத்துக்கும் அதிகமான வேட்பாளர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு ஆரம்பமாகியிருந்த நிலையில் தலைநகர் காபுலில் உள்ள வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டிருந்த சில பாசாசாலைகள் மீது தலிபான்கள்; று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். . இந்த தாக்குதல் மற்றும் தேர்தல் சார்ந்த வன்முறை சம்பவங்களில் 130-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன