198
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் புதிய கட்சி ஒன்று இன்றையதினம் உருவாக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனப் பெயரிடப்பட்ட கட்சி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளராக அனந்தி சசிதரன் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த அனந்தி சசிதரன் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகி செயற்பட்டு வந்தார்.
Spread the love