164
தாய்வானின் வடகிழக்குப் பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகினதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொங்ஷான் நகரத்திலிருந்து சுஷின் என்ற நகரத்திற்கு இடையில் பயணிக்கும் புயுமா எக்ஸ்பிரஸ் என்னும் புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான புகையிரதத்தில் மேலும் 30-40 வரையான பயணிகள் சிக்குண்டு இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்பணியாளர்கள் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love