172
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற புகையிரத விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையகம் அழைப்பாணை விடுத்துள்ளது.
தசரா விழாவின்போது ஏற்பட்ட இந்த புகையிரத விபத்தில் 61 பேர் உயிரிழந்துள்ளடன் மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து மாநில அரசும், புகையிரத வாரியம் மற்றும் புகையிரத அமைச்சு ஆகியவை 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது
Spread the love