160
தென்மராட்சி கலைமன்றம் நடத்திய கலாசாரப் பெருவிழா கடந்த 20.10.2018 மாலை சாவகச்சேரி சிவன்கோவிலுக்கு அருகில் உள்ள கலாசார மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் க.மோகனராஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சஜந்தனும் கௌரவ விருந்தினராக தென்மராட்சி உதவிப் பிரதேச செயலர் வினோஜிதா கணேசநாதனும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றினர். யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் வாழ்த்துரை வழங்கினார். தென்மராட்சி பிரதேச கலைஞர்கள் வழங்கிய பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. .
இதில் வாழ்த்துரை வழங்கிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தென்மராட்சியின் இசைவளம் குறித்துச் சில கருத்துக்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர், மற்றும் கொழும்பில் இசைச் சாதனை புரிந்த விரிவுரையாளர் அ.ஆரூரன், இசையாசிரியர் பொன். வாமதேவன் இவர்கள் இந்த மண் சார்ந்தவர்கள்.
இருப்பினும் இசைசார்ந்த தேக்க நிலை தென்மராட்சிக்கு இருப்பது கவலைக்குரியது. இதை நீக்கும் முகமாகப் பல எத்தனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். நிகழ்வில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love