போர்முலா வன் கார்பந்தயப் போட்டியின் 18-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டியில் பின்லாந்து வீரர் கிமி ராய்கோனென் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான போர்முலா வன் கார்பந்தயப் போட்டி உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் போட்டியில் 18 வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி பந்தயம் ஒஸ்டின் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதன்போது பந்தய தூரமான 308.405 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் போட்டியிட்ட நிலையில் பெராரி அணிக்காக போட்டியிடும் பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனென் 1 மணி 34 நிமிடம் 18.634 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை கைப்பற்றியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் கிமி ராய்கோனென் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் நடப்பு சம்பியனான இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் 2.342 வினாடிகள் பின்தங்கி 3-வது இடம் பிடித்து 15 புள்ளிகள் பெற்றுள்ளார். இந்த போட்டியில் லுயிஸ் ஹமில்டன் முதலிடம் வந்திருந்தால் சம்பியன் பட்டத்தை உறுதி செய்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.