யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் “ஞானலிங்கம்” – ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரர் ஸ்தாபிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டப வாயிலில் அமைந்துள்ள பழமையான மேடையில் குறித்த சிவலிங்கம் பிரதிஸ்டை செய்ய்யப்பட்டுள்ளது. 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யும் விம்பஸ்தானம் நிகழ்வு நடைபெற்று; அன்றைய தினமே மாலை எண்ணெய்காப்பு சாத்தப்பட்டது.
தொடர்சியாக 22.10.2018 திங்கட்கிழமை அன்று ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரருக்கான மகா கும்பாபிசேக நிகழ்வி சிறப்புற நடைபெற்றது. மகா கும்பாபிசேக நிகழ்வுகள் சாகித்ய சிரோன்மணி யாழ் நயினை சிவஸ்ரீ. வை.மு.ப. முத்துக்குமாரசாமி சிவாசாரியாரினால் மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி இந்து இளைஞர் சபையினரால் குறித்த நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பான முறையில் கல்லூரி அதிபர் ஆசிரியர், மாணவர்கள், பழைய மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் நெறிபிறழ்வாக உருமாறி வருகின்றனர் என்ற கருத்து நிலவும் தருணத்தில்; பாடசாலைகளில் இவ்வாறான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். குறித்த சிவலிங்கத்தினை மாணவர்கள் மலர் தூவி, நீர் அபிசேகம் செய்து வழிபடும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இவ்வாறாக எமது தொன்மையான சைவ சமய மரபுகளைப் பாதுகாத்து இளைய சந்ததியினருக்கு வழங்கும் நடவடிக்கையாகே ஈழத்தில் இது பார்க்கப்படுகின்றது; ஒரு சைவ பாடசாலையின் முன்மாதிரியான நடவடிக்கையாகும்.
1 comment
மாணவர்கள் சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து, சிவலிங்கத்தை தினசரி வழிபட வேண்டும். இத்துடன் தங்கள் வாழ்வை வழிப்படுத்தி, சைவர்களாக வாழ சைவ சமயத்தின் முக்கிய நூல்களாகிய பதினான்கு சாத்திரங்களையும் பன்னிரண்டு திருமுறைகளையும் படிக்க வேண்டும்.