இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோவுக்கு அயல்நாட்டு அரசியல் தலைவர்களை கொல்ல வேண்டிய தேவையில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் உள்ள சில புலனாய்வு அமைப்புக்கள் போலன்றி றோ அமைப்பானது ஒழுக்கமுள்ள அமைப்பு என்றும் சரத்பொன்சேகா கூறியிருப்பது இலங்கை புலனாய்வு அமைப்புக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரே இவ்வாறு கூறியிருப்பதே இந்த சலசலப்பிற்கு காரணமாகும். இந்தியாவின் உயர் தொழில்சார் வேலைத் திட்டத்தை கொண்டறோ அமைப்பு அயல்நாட்டு தலைவர்களை கொல்லும் நோக்கத்திற்காக உருவாக்கப்படவில்லை என்றும் சரத் பொன்சேனா கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய இந்திய றோ அமைப்பு திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த போதே அமைச்சர் சரத்பொன்சேகா இதனை கூறினார்.
இதேவேளை அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுவது இயல்பு என்று தெரிவித்துள்ள பொன்சேகா, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல்கள் எதுவும் இருப்பதாக தான் கருதவில்லை என்றும் தெரிவித்தார்.