ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இலஞ்சம்; கொடுக்காதமை காரணமாக 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கஸ்னி மாவட்டத்தில் சுமார் 600 பாடசாலைகளில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகினற நிலையில் ஒவ்வொருமாதமும் அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியை தலிபான் தீவரவாதிகள் இலஞ்சமாக பெற்று வந்துள்ளனர்.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் வங்கியில் சம்பளப் பணத்தினை வைப்புச் செய்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தலிபான்கள் ஆசிரியர்களை தலிபான்கள் வற்புறுத்தினர். எனினும் இதற்கு ஆசிரியர்கள் இணங்காமையினால் அங்குள்ள சில பாடசாலைகளில் கடமையாற்றும் 125 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 160 பேரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது