மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்தக் கோரி, மலையக இளைஞர்களால், மாபெரும் கறுப்புச் சட்டைப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட உள்ளது. வாழ்வாதாரத்திற்கு ஏற்ப அடிப்படைச் சம்பளத்தை அதிகரி, தீபாவளி முற்பணததை உரிய நேரத்தில் வழங்கு, .கூட்டு ஒப்பந்தத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்து, .கூட்டு ஒப்பந்தத்தை மீறி, உரிமைகளைப் பறிக்காதே, தோட்டத் தொழிலாளியை கௌரவமாக நடத்து ஆகிய கோரிக்கைளை முன்வைத்தே இப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சமூக வலைத்தளத்தில் இணைந்த இளைஞர்கள் இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், இம்மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ள நிலையில் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரி மலையகத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும், தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றதன் தொடர்ச்சியாக இன்று இந்த கறுப்புச் சட்டைப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.