ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு பணிஇடைநிறுத்தம் செய்யப்பட்டள்ள முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வாவின் மடிக்கணிணியில் இருந்து சந்தேகத்துக்கிடமான சில ஆதாரங்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாலக டி சில்வாவின் அலுவலக மடிக்கணிணியில் ரசிகா சஞ்ஜீவனீ எனும் பெயரில் பயன்படுத்தப்பட்டுள்ள போலி முகப்புத்தக கணக்கினை மையப்படுத்தி இந்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போலிக் கணக்கூடாக அவர் யாருடன் என்ன உரையாடினார், என்பதை வெளிப்படுத்த மடிக் கணினியை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நேற்றைய தினம் புலனாய்வும் துறையினர் நீதிமன்றிடம் அனுமதி பெற்றுள்ளனர்.
ஏற்கனவே அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பட்ட இந்த விவகாரத்தின் முறைப்பாட்டாளரான காவல்துறை உளவாளி நாமல் குமாரவின் தொலைபேசியில் பல தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதால், அதனை அந்த தொலைபேசி உற்பத்தி செய்யப்பட்ட ஹொங்கொங் நாட்டுக்கு அனுப்பி அந்த தகவல்களை மீளப் பெறவும் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்கது