இலங்கை, இந்திய நாடுகளுக்கிடையிலான கடற்பிராந்தியம்சார் இருதரப்பு நல்லுறவு, இரு நாடுகளுக்குமிடையிலான, அனைத்துத் துறைகள் குறித்த ஒத்துழைப்பிற்கான அடிப்படையாக அமைந்துள்ளது என, இந்தியக் கடற்படையின் கடற்படை ஊழியர்களுக்கான பிரதிப் பொறுப்பதிகாரி பிரதி அட்மிரல் ஜி.அஷோக் குமார் தெரிவித்தார். கொழும்பில் இரு நாட்கள் நடைபெற்ற ‘காலி கலந்துரையாடல் 2018″ இல் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,
கடற்பிராந்தியத்தின் ஊடாக இடம்பெறும் பூகோள பயங்கரவாத நிலைமைகள் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றன. நவீன தகவல் தொழில்நுட்பம், நிறுவனங்களின் நெகிழ்வுத்தன்மை மற்றும் நிதிவழங்கல் முறைகளின் அதிகரிப்பு போன்றவை பயங்கரவாத செயற்பாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. மேலும் வன்முறைகளற்ற பிராந்தியத்தை உருவாக்குவதை நோக்கிய செயற்பாடுகள், கடற்பிராந்திய வலையமைப்புக்கள் போன்றன தற்போது அதிகரித்து வருவதுடன், துறைமுகங்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு சவால்களும், தேவைப்பாடுகளும் அதிகரித்துள்ளன. இவை கடற்பிராந்தியப் பாதுகாப்பினை வலுப்படுத்துவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ளார்.