Home உலகம் சிஎன்என் அலுவலகத்திற்கு சந்தேகத்திற்கிடமான பொதிகள் :

சிஎன்என் அலுவலகத்திற்கு சந்தேகத்திற்கிடமான பொதிகள் :

by admin


அமெரிக்காவில் சிஎன்என் அலுவலகத்திற்கும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோருக்கு இனந்தெரியாத நபர்கள் வெடிகுண்டுகள் அடங்கிய பொதிகளை அனுப்பிவைத்துள்ளதாக பெரும் பரபரப்பு உருவாகியுள்ள நிலையிலேயே இவ்வாறு சிஎன்என் அலுவலகத்திற்கும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியுயோர்க்கின் டைம்வோர்னர் நிலையத்தில் உள்ள சிஎன்என் அலுவலகத்திற்கு வெடிபொருட்கள் அடங்கிய பொதி அனுப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த அலுவலகத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிஐஏயின் முன்னாள் இயக்குநர் ஜோன் பிரெனின் பெயருக்கே குறிப்பிட்ட பொதி அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஒபாமா ஹிலாரி ஆகியோரிற்கு அனுப்பப்பட்ட பொதியில் காணப்பட்ட அதேபொருளே சிஎன்என் அலுவலகத்திற்கு வந்த பொதியிலும் காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்தள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More