வெலிக்கட மற்றும் கொழும்பு விளக்கமறியல் மற்றும் மகசின் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக இன்று முதல் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் வெளியிலிருந்து வருவோரை பரிசோதனை செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபடுவர் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளவுள்ளதாவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்தது.
மேலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கைதிகள் 08 பேர் நேற்று முதல் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.