சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று வியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளதன்காரணமாக அதற்கு முன்னர் காவல்துறை ஆணைக்குழு உள்ளிட்ட சிவில் பிரதிநிகளின் நியமனத்துக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறு இன்று அரசியலமைப்புச் சபை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஆணைக்குழுக்கள் பலவற்றின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது