விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தடை விக்க நீதிமன்றம் மறுத்து தீர்ப்பளித்துள்ளது. நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள் ளிட்டோர் நடித்துள்ள சர்கார் என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வருண் என்ற ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி படத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். வழக்கிற்கு பதிலளிக்க சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ் உள்ளிட்டோருக்கு அழைப்பானை அனுப்பவும் உத்தரவிட்டார்.