பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியாவின் இளம் சுழல்பந்துவீச்சாளர் ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை


அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுக் கிரிக்கெட் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் போட்டியில் தெற்கு அவுஸ்திரேலியா அணியின் 18 வயது இளம் சுழல்பந்துவீச்சாளரான லொய்ட் போப் (Lloyd Pope) குவீன்ஸ்லாந்துக்கு எதிரான போட்டியின் போது ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

லொய்ட் போப் ஏற்கெனவே நியூசிலாந்தில் நடந்த இளையோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 35 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் .  இவரது இந்தப் பந்து வீச்சு நிபுணர்கள், ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இன்னொரு ஷேன் வோர்னாக இருப்பாரா என எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.