179
கிரீஸின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love