189
ஜோர்டானில் சாக்கடல் அருகே பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 37 மாணவர்கள் மற்றும் ஏழு பாடசாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற குறித்த பேருந்து ஜாரா மயீன் வெண்ணீரூற்று உள்ள பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்டுள்ளவர்களில் சிலர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love