அஅஸ்திரேலியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் பங்களாதேஸ் பிரீமியர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுடனான தொடரின்போது பந்தை சேதப்படுத்தியமை தொடர்பில் டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை ஓராண்டு தடைவிதித்திருந்தது.
இதனால் கரிபியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய டேவிட் வோர்னர் தற்போது உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் விளையாடி வருகிறார்.இந்நிலையில் பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையினால் நடத்தப்படும் பங்களாதேஸ்; பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ள டேவிட் வோர்னர் சியல்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.