வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்திருந்தநிலையில் அவரது உத்தரவை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திரு.திருஞானசோதி தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த காணிகளை விடுவிப்பதில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதுடன் அவற்றுக்கான தீர்வு வமுறைகள் குறித்து ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.