இலங்கையில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் சூழ்நிலை தொடர்பில் அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ருவிட்டர் பதிவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமையை அடுத்து வெளியாகி உள்ள ருவீட்டர் பதிவில், வன்முறைகளை தவிர்த்து இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்க, பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளை – பொறுப்பு கூறலையும் நல்லிணக்கத்தையும், நீதியையும் உரிய வகையில் பேண வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.