தமிழக கோயில்கள் அனைத்திலும் பிளாஸ்டிக் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் சென்னையில் நடைபெற்ற தமிழக திருக்கோயில் வளாகங்களை பசுமையாக்கிட சிறந்த சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த வல்லுநர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் மற்றும் பசுமை கோயில் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையர்றிய எக்ஸ்னோரா பசுமைஇயக்கத் தூதுவரும், பாடகியுமான அனுராதா ஸ்ரீராம், ‘அமெரிக்காவில் 5-ம் வகுப்பு முடித்த உடன் மாணவர்களுக்கு சமூக சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப் போல, நம் நாட்டிலும் மாணவர்களுக்கு பாடசாலையில் சமூக சேவை செய்வதை கட்டாயம் ஆக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பிரசாதங்களை பிளாஸ்ரிக் பைகளில் வழங்குவதை தவிர்த்து பேப்பர் பிளேட், பாக்கு மட்டை மற்றும் துணிப் பைகள் போன்றவற்றை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பசுமை கோயில் திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்