161
பாராளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்றை ஒத்திவைத்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் ஆராய நாளை உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் திங்கட் கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்திருந்தார். எனினும் ஜனாதிபதி தலையிட்டு பாராளுமன்றத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
Spread the love