137
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை பதவி நீக்குவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, பதவியிலிருந்து நீக்கி, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸவை நியமித்தமை, நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வரும் நிலையில் ஜனாதிபதி மீது பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அக்கட்சி தயாராகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love