168
யாழில் மஹிந்த ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். யாழில். உள்ள பிரதான வீதிகள் ஊடாக வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவின் பாரிய பாதகை ஒன்று கட்டப்பட்டு வாகன தொடரணியாக சென்ற ஆதவாளர்கள் முக்கிய சந்திகளில் வெடி கொளுத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் வெடிகளை கொளுத்தி முக்கிய சந்திகளில் ஆதவாளர்கள் ஆர்ப்பரித்ததனால் வீதியில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதுடன் வீதியால் சென்றவர்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
வெடி கொளுத்தி கொண்டாடிய ஆதரவாளர்களுக்கு மாயவன் ரெக்ஸ்ரைல்ஸ் உரிமையாளர் பிரசாந்தன் , பிரபல தொழிலதிபர் சந்திரமோகன் , திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் ஸ்ரீமோகனராஸ் மற்றும் சிவா பில்டிங் டெவலப்பேர்ஸ் உரிமையாளர் சிவநேசன் ஆகியோர் பிரதான அனுசரனை வழங்கியுள்ளனர்.
Spread the love