148
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவினால் சாரணர்களின் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்யும் நோக்கமாக மூன்று நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சி முகாம் ஒன்று சிறப்புற கல்லூரி வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இதில் பல்வேறு துறைசார்ந்த வளவாளர்கள் தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகளினை சாரணர்களிற்கு வழங்கியிருந்தனர். இதன் போது சாரணர்களிடையே மறைந்திருந்த பல்வேறு திறமைகள் வெளிக்காட்டப்பட்டிருந்தமை அனைவரதும் பாராட்டினையும் பெற்றிருந்தது. குறித்த நிகழ்விற்கு கல்லூரி அதிபரின் வழிகாட்டுதலில் திரி சாரணர்களின் பூரண ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துருப்புத் தலைவர் செல்வன்.சி.பிரணவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வினை குழுச்சாரண பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதன் நெறிப்படுத்தியிருந்தார்.
நிகழ்வுகள் 22.10.2018 (திங்கட்கிழமை) மாலை சாரணர் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இறுதி நிகழ்வானது 24.10.2018 புதன்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இந் நிகழ்விற்கு மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு.எஸ்.தவகோபால் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் வளவாளர்களாக கு.மகிழ்ச்சிகரன் சிறந்த தலைவனுக்கான மனவுறுதி என்னும் தலைப்பிலும் சின்மியாமிசன் சுவாமிகள் சிறந்த தொண்டனே சிறந்த தலைவன் தொடர்பான தலைப்பில் கருத்தரங்கினை முன்னெடுத்திருந்தார்.
அதே போன்று சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.முகுந்தன் அவர்கள் கல்லூரி மரபுடன் தலைமைத்துவம் என்னும் தலைப்பில் நிகழ்த்தியிருந்தார். கல்லூரி அதிபரின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதன் போது சாரணர்களின் அனுபவ பகிர்வு மற்றும் பிரதம விருந்தினர் அவர்கள் ஒருவரது வாழ்வில் சாரணராக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்து குழுச் சாரண பொறுப்பாசிரியர் எதிர்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள கூடிய ஆளுமை மிக்க தலைவனை உருவாக்குவதில் சாரணரின் பங்கு தொடர்பாக எடுத்துக் கூறியிருந்தார். தொடர்ந்து பாசறை வாசம் அனுபவம் தொடர்பாக இளநிலை சாரணர்களும் சிரேஸ்ட சாரணர்களும் தமது அனுபவ பகிர்வினை எடுத்துக் கூறியிருந்தனர்.
அதனை தொடர்ந்து பெற்றோர்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு பாசறையின் போது நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய சாரணர்களிற்கு பரிசில்கள் வழங்கப்பட்டு சிறந்த அணியாக வல்லூறு அணி தெரிவு செய்யப்பட்டது. பின்னர் கல்லூரி கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
Spread the love