இந்தியாவின் ஒன்றிய பிரதேசங்களின் ஒன்றான கோவாவின் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான அவர் கடந்த 7 மாதங்களாக சுகவீனம் காரணமாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 14ஆம் திகதி டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது வீட்டில் 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்தநிலையில் மனோகர் பாரிக்கர் இல்லாததால் கோவா ஆட்சி அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
மனோகர் பாரிக்கருக்கு ஏற்பட்ட நோய் தொடர்பில் மாநில அரசும், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இரகசியமாக வைத்து இருந்த நிலையலி.அவரது உடல் நிலை குறித்து விளக்க வேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் மாநிலத்தை வலியுறுத்தியது.
மனோகர் பாரிக்கர் உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பதை 4 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் காங்கிரஸ் காலக்கெடு விதித்தது. இந்த நிலையில் கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே முதலமைச்சருக்கு கணைய புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.