406
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மகிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்தகுமாரும் மகிந்தவுக்;கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையக மக்கள் முன்னணி கட்சியின் நிர்வாக குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலுசாமி இராதாகிருஷ்ணனுக்கு அமைச்சரவையில் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love